Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு எம்மைப் பற்றி
இ.கா.மீ.அ.கூ. ஐ பற்றி
பின்னணி
1968 இன் 15 ஆம் இலக்கமுடைய கொழும்பு மாவட்டத்தின் தாழ் நிலப் பிரதேசங்களை மீட்டல், அபிவிருத்தி செய்தலுக்கான சபை இரண்டு குறிக்கோள்களைக் கொண்டதாகவே தாபிக்கப்பட்டது.
1. 1968 இன் 15 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் 2 வது வாசகத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சதுப்பு நிலங்களையும் தாழ்  நிலப் பிரதேசங்களையும் மீட்டலும் அபிவிருத்தி செய்தலும்.
2. அவ்வாறு  உடைமையாக்கப்பட்ட காணிகளின் கட்டுக்காப்பு, முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடு.
இவ்விதமாக மீட்கப்பட்ட காணிகளை விற்பணை செய்வதற்கான அதிகாரத்தையும் வழங்கி இந்நிறுவனத்தைப் பலப்படுத்தக்கூடிய வகையில் இச்சட்டமானது 1976 இன் 27 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் மூலமாகத் திருத்தி அமைக்கப்பட்டது.
தொடக்கத்திலிருந்தே கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்நிறுவனத்தின் பணிகள் 1979 இல் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியேயும் விரிவாக்கப்பட்டதன் மூலம் திட்டமிட்ட அடிப்படையிலான காணி மீட்டல் நன்மைகளை முழு நாட்டுக்குமே பரவலாக்க இயலுமாயிற்று.
1968 இன் 15 ஆம் இலக்கமுடைய கொழும்பு மாவட்டத்தின் (தாழ் நிலப் பிரதேசங்கள்) மீட்டல், அபிவிருத்திச் சபைச் சட்டத்தைத் திருத்தியமைத்து, 1982 இன் 52 ஆம் இலக்கமுடைய திருத்தச் சட்டம் மூலமாக இந்த நிறுவனமானது இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என  மீளப் பெயர் குறிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக விடயப் பரப்பெல்லையையும் பொறியியல் துறையின் நிர்மாணப் பணிகளையும் ஆலோசனைச் சேவைகளையும் உள்ளடக்கக்கூடியவாறு விரிவாக்கப்பட்டது.
சட்டத்திற்கு அண்மையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியதாக 2006 இன் 35 ஆம் இலக்கச் சட்டம் மூலமாக அத்துமீறி மேற்கொள்ளப்படுகின்ற காணி நிரப்பல் நடவடிக்கைகளுக்கும் நீர்த் தேக்கங்களை மாசுபடுத்துவதற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியும். இத்தகைய தண்டணை வழங்கக்கூடிய ஏற்பாடுகள் 20 ஊ மற்றும் 22 யு பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1976 இன் 27 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1982 இன் 52 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 2006 இன் 35 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1968 இன் 15 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் 8 மற்றும் 9 ஆகிய பிரிவுகளில் இக்கூட்டுத்தாபனத்தின் பிரதான குறிக்கோள்களும் தத்துவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்கள்
1. சட்டத்தின் 2, 2டி மற்றும் 4ய பிரிவுகளின் கீழான கட்டளை மூலமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு மீட்டல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான பிரதேசங்களை மீட்டெடுத்து அபிவிருத்தி செய்தலும் அப்பிரதேசங்களிலுள்ள கட்டிடங்களை கைத்தொழில், வணிக அல்லது  விவசாயப் பணிகளுக்கு பொருத்தமானவையாக மாற்றுதலும்.
2. சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அத்தகைய பிரதேசங்களிலுள்ள காணிகளை மீட்டு அபிவிருத்தி செய்யும் வரை அவற்றின் கட்டுக்காப்பு, முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டினை வகித்தல்.
3. சட்டத்தின் 2 மற்றும் 2டி பிரிவுகளின் கீழான கட்டளை மூலமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களினது துறை சார்ந்த ஆலோசனை ஒப்படைகளையும் பொறுப்பேற்றல்
4. கால்வாய்களின் கட்டுக்காப்பு, முகாமைத்துவம், முன்னேற்றகரமாக்குதல், பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடுக்கு பொறுப்பாக இருத்தலும் கால்வாய்கள் மாசடைவதைத் தடுத்தலும்.
கூட்டுத்தாபனத்தின் தத்துவங்கள்
1. எந்தவொரு பிரதேசத்தையும் கொள்ளுதல், வைத்திருத்தல், குத்தகைக்குப் பெறுதல் அவ்வாறின்றேல் எந்தவோர் ஆதனத்தையும் ஈடு வைத்தல் பிணையமாக வைத்தல், விற்பனை செய்தல் அல்லது வேறு விதமாக உடைமையகற்றுதல்.
2. சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள மீட்டலுக்கும் அபிவிருத்தி செய்தலுக்குமான பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளளை ஏற்பாடு செய்தலும் அமுலாக்குதலும்.
3. அத்தகைய பிரதேசங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலுடன் தொடர்புடைய  ஏதேனும் செயற் திட்டங்களை வகுத்தலும் அமுலாக்குதலும்.
4. அத்தகைய பிரதேசங்களின் துறைமுகங்களையும் நங்கூர தலங்களையும் நிர்மாணித்தல், நீர்ப்பாசனத் துறையைச் சார்ந்த வேலைகள், கடல் மீட்பு மற்றும் கரையோர அபிவிருத்தி நடவடிக்கைகளை பொறுப்பேற்றல்.
5. அத்தகைய பிரதேசஙகளில் வீதிகளை நிர்மாணித்தல்.
6. அத்தகைய பிரதேசங்களில் கீழே குறிப்பிடப்பட்ட சேவைகளையும் உள்ளடக்கிய பொதுச் சேவைகளை வழங்க அவசியமான  நிர்மாணிப்பு பணிகளைச் செய்வித்தல்.
i. மேற்பரப்பு நீர்வடிகால்
ii. சாக்கடை மற்றும் கழிவகற்றல்
iii. நீர் விநியோகம்
7. கட்டிடங்கள், பொறியியல் அல்லது நிர்மாணப் பணிகளுக்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்தலை உள்ளடக்கிய கட்டிட நடவடிக்கைகள், பொறியியல் நடவடிக்கைகள் மற்றும் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளல்.
8. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய ஆலோசனை மற்றும் மதியுரை சேவைகளை வழங்குதல்.
9. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காணி அபிவிருத்தி கருத்திட்டங்களையும் செயற்திட்டங்களையும் அமுலாக்குவதற்காக எந்தவோர் ஆளுடனும் எந்தவோர் ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளல்.
2006 இன் 35 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் மூலமாக முதன்மைச்சட்டவாக்கத்திற்குத் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள்:
1. கால்வாய்களின் கட்டுக்காப்பு, முகாமைத்துவம், முன்னேற்றகரமாக்குதல். பராமரிப்பு கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பாவிருத்தலும் கால்வாய்களை மாசுபாட்டிலிருந்து தடுத்தலும்.
2. சட்டத்தின் 2 மற்றும் 2டி பிரிவுகளின் கீழ் மீட்டலுக்கும் அபிவிருத்தி செய்தலுக்குமான பிரதேசங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள எந்தவொரு பிரதேசத்திலும் நிரப்பும் பணிகளைம் அபிவிருத்தி செய்யும் பணிகளையும் இக்கூட்டுத்தாபனத்தின் எழுத்திலான அனுமதியின்றி மேற்கொள்வதை  தடை செய்தல்.
3. சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள மீட்டலுக்கும் அபிவிருத்தி செய்தலுக்குமான  பிரதேசங்களுக்கு வெளியிலுள்ள எந்தவொரு பிரதேசத்தையும் தாழ்ந்த சதுப்பு நிலம், தரிசு நிலம் அல்லது சேற்று நிலமாக பிரகடனம் செய்தல்.
4. கால்வாய்க் கரையின் எந்தவொரு பிரதேசத்தையும் 'கால்வாய் ஒதுக்குப் பிரதேசம்' என பிரகடனம் செய்தலும் இக்கூட்டுத்தாபனத்தின் எழுத்திலான அனுமதியின்றி அத்தகைய பிரதேசங்களில் கட்டிடங்களையோ கட்டமைப்பு சார்ந்த நிர்மாணிப்புகளையோ தடைசெய்தல்.
வலிமைகள்
1. இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் காணிகளைக் கொள்ளவும் அவற்றை மீட்கவும் அபிவிருத்தி செய்யவும்  அவற்றில் பல்வேறு பணிகளை புரியவும் பாராளுமன்றச் சட்டத்தின் மூலமாக கூட்டுத்தாபனத்திற்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்கள்.
2. காணி அபிவிருத்தி, மழைநீர் வடிகாலமைப்பினைத் திட்டமிடல், சிவில் பொறியியல் சார்ந்த நிர்மாணிப்பு வேலைகள், நாட்டுக்குள்ளே அகழ்வுப் பணிகள், ஆக்க வேலைகள் மற்றும் சுற்றாடல் ஆய்வுகள் ஆகிய கருமங்களுக்கான நிபுணத்துவ அறிவும் இயந்திர சாதனங்களும் கூட்டத்தாபனத்திடம் இருத்தல்.
3. ICTAD – M1 இல் பதிவு செய்ததன் விளைவாக வரையறையற்ற பெறுமதியினைக் கொண்ட நிர்மாணக் கருத்திட்டங்களில் ஈடுபட கூட்டுத்தாபனம் கொண்டுள்ள ஆற்றல்.
4. சட்டத்திற்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கிணங்க அத்துமீறிய காணி மீட்டல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நீர்த்தேக்கங்களை மாசுபடுத்துவதற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் சபைக்கு உண்டு.
5. சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களிலும் கால்வாய்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறிய கட்டிடவாக்கங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் சபைக்கு உண்டு.
வாய்ப்புக்கள்
1. பல்வேறு ஆட்கள் எதிர்பார்க்கின்ற நிர்மாணிப்புக்கு பொருத்தமான காணிகள் தொடர்பில் அதிகரித்து வருகின்ற கேள்வி
2. நீர்த்தேக்கங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் களியாட்ட விளையாட்டு வசதிகளுக்காக அதிகரித்துவரும் கேள்வி.
3. உள்நாட்டு நீர்த்தேக்கங்களில் சேற்றினை அகற்றுதல் தொடர்பில் கூட்டுத்தாபனம் ஏகபோக உரிமை கொண்டுள்ள நிலைமையில் அதிகரித்து வருகின்ற கேள்வி.
4. ஆறுகளிலிருந்து மணல் கரை சேர்க்கப்படுவதனால் தோன்றுகின்ற சுற்றாடல் பாதிப்புக்களைத் தடுக்கும் பொருட்டு கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள மணலை நிர்மாணத்துறைக் கைத்தொழிலுக்கு வழங்குதல்.
5. கடற்பரப்புகளை நிரப்புவதன் மூலமாக காணிகளை உருவாக்குதல்.
6. நிர்மாணத்துறைக் கைத்தொழிலுக்கு அவசியமான கட்டுமாணத்திற்கு முற்பட்ட பொருட்களுக்காக நிலவுகின்ற கேள்வி.
7. அரசதுறையுடனான நெருங்கிய தொடர்பு

1968 இன் 15 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் 2 வது வாசகத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சதுப்பு நிலங்களையும் தாழ்  நிலப் பிரதேசங்களையும் மீட்டலும் அபிவிருத்தி செய்தலும்.
Last Updated on Friday, 04 November 2016 10:52