Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு எம்மைப் பற்றி
வரலாறு

1968 இன் 15 ஆம் இலக்கமுடைய கொழும்பு மாவட்டத்தின் தாழ் நிலப் பிரதேசங்களை மீட்டல், அபிவிருத்தி செய்தலுக்கான சபை இரண்டு குறிக்கோள்களைக் கொண்டதாகவே தாபிக்கப்பட்டது.

  1. 1968 இன் 15 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் 2 வது வாசகத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள சதுப்பு நிலங்களையும் தாழ் நிலப் பிரதேசங்களையும் மீட்டலும் அபிவிருத்தி செய்தலும்.
  2. அவ்வாறு உடைமையாக்கப்பட்ட காணிகளின் கட்டுக்காப்பு, முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடு.

இவ்விதமாக மீட்கப்பட்ட காணிகளை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தையும் வழங்கி இந்நிறுவனத்தைப் பலப்படுத்தக்கூடிய வகையில் இச்சட்டமானது 1976 இன் 27 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் மூலமாகத் திருத்தி அமைக்கப்பட்டது.

தொடக்கத்திலிருந்தே கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்நிறுவனத்தின் பணிகள் 1979 இல் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியேயும் விரிவாக்கப்பட்டதன் மூலம் திட்டமிட்ட அடிப்படையிலான காணி மீட்டல் நன்மைகளை முழு நாட்டுக்குமே பரவலாக்க இயலுமாயிற்று.

1968 இன் 15 ஆம் இலக்கமுடைய கொழும்பு மாவட்டத்தின் (தாழ் நிலப் பிரதேசங்கள்) மீட்டல், அபிவிருத்திச் சபைச் சட்டத்தைத் திருத்தியமைத்து, 1982 இன் 52 ஆம் இலக்கமுடைய திருத்தச் சட்டம் மூலமாக இந்த நிறுவனமானது இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என மீளப் பெயர் குறிக்கப்பட்டது.

சட்டத்திற்கு அண்மையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியதாக 2006 இன் 35 ஆம் இலக்கச் சட்டம் மூலமாக அத்துமீறி மேற்கொள்ளப்படுகின்ற காணி மீட்டல் நடவடிக்கைகளுக்கும் நீர்த் தேக்கங்களை மாசுபடுத்துவதற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியும். இத்தகைய தண்டணை வழங்கக்கூடிய ஏற்பாடுகள் 20C மற்றும் 22A பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1976 இன் 27 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1982 இன் 52 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 2006 இன் 35 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1968 இன் 15 ஆம் இலக்கமுடைய சட்டத்தின் 8 மற்றும் 9 ஆகிய பிரிவுகளில் இக்கூட்டுத்தாபனத்தின் பிரதான குறிக்கோள்களும் தத்துவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Last Updated on Tuesday, 16 February 2016 09:00