Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு சேவைகல்
தாழ் நிலங்களை நிரப்புவதற்கான அனுமதி
விண்ணப்பப் பத்திர மாதிரி
அறிவுறுத்தல் குறிப்பு
எக் ரொபட் ரீடர் மென் பொருள் அவசியமாகையால் அதைப் பெற்றுக்கொள்ளவூம.
காணியை நிரப்புவதற்கான நடவடிக்கை முறை

1. விண்ணப்பப்பத்திரம் ஒன்றை இ.கா.மீ.அ.கூ. இடமிருந்து தபால் மூலமாகவோ www.landreclamation.lk வெப் தளம் மூலமாகவோ பெற்றுக்கொள்ள வேண்டும்.

2. காணி உறுதியின் பிரதி ஒன்றை நில அளவைத் திட்டத்தின் 03 பிரதிகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். தாயாரித்தல் கட்டணமாக மீளளிக்கமுடியாத கட்டணமொன்றை (ரூபா. 3,000/- 10 சேர் பெறுமதி வரி) செலுத்த வேண்டும்.

3. சேவைபெறுநர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியையும் உள்ளூராட்சி அதிகாரசபையின் அனுமதியையும் (வயற் காணிகளுக்காக மாத்திரம்) கமநலசேவைகள் திணைக்களத்தின் அனுமதியையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

4. (தேவையான சந்தர்ப்பங்களில்) மத்திய சுற்றாடல் அதிகாரசபையினதும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினதும் அங்கீகாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

5. அது கொள்ளப்பட்ட அல்லது வெளிப்படுத்திய காணியா என்பதை பரிசீலனை செய்யும் பொருட்டு காணி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுக்கு அனுப்பப்படல் வேண்டும்.

6. சொத்துவம் பற்றி பரிசீலனை செய்யும் பொருட்டு சட்டப் பிரிவுக்கு அனுப்பப்படல் வேண்டும்.

7. காணியின் அபிவிருத்தியானது புவிச்சரிதவியல், வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் நிலைமை மீது பாதிப்பினை ஏற்படுத்துமா என பொறியியலாளர் ஒருவர் பரிசீலனை செய்தல் வேண்டும்.

8. அத்தகைய பரிசீலனையின் பின்னர் அவரது விதப்புரை சகிதம் அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

9. அடுத்ததாக ஏற்புடைய அறிக்கை திட்டமிடல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இறுதித் தீர்மானம் திட்டமிடல் குழுவினாலேயே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

10. திட்டமிடல் குழுவின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் சேவை பெறுநரால் சேவைக் கட்டணத்தின் எஞ்சிய தொகை செலுத்தப்படல் வேண்டும்.

11. பொறியியல்சார் நீரியலுக்கு இணங்க வடிகாலமைப்பு திட்டம் ஃ வடிகாலமைப்பு நிபந்தனைகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

12. அதன் பின்னர் நிபந்தனைக் கடிதம் / வடிகாலமைப்பு திட்டம் விநியோகிக்கப்படும்.



Last Updated on Friday, 07 July 2017 15:39