Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு
கேள்வியும் பதில்களும்

நீங்கள் வசிக்கும் கொழும்பு பெரும்பாக பகுதி ஈரவலயமாக இனங்காணப்பட்டுள்ளது. இதன் வருடாந்த மழை வீழ்ச்சி 2396 மி.மீ. ஆகும். எனவே கால்வாய்களும் சதுப்பு நிலங்களும் மழை நீரினால் நிரம்பிக் காணப்படும். கடலுக்கு நீர் பாய்;ந்து செல்லும் இரண்டு இடங்கள் மாத்திரமே உள்ளன. (வெள்ளவத்தை, மற்றும் தெஹிவலை) களனி கங்கைக்கு நீர் பாய்ந்து செல்லும் இடமொன்று நாகலகம் தெருவில் உள்ளது. கொழும்பு பெரும்பாக பிரதேசத்தின் நீர் இந்த இடங்கள் மூலமாகவே வெளியேற்றப்பட வேண்டி உள்ளது. கொழும்பு பெரும்பாக வெள்ளப்பெருக்கு கட்டுப்பாடு மற்றும் சுற்றாடலை முன்னேற்றகரமாக்குவதற்கான கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு பெரும்பாக பிரதேசத்தின் கால்வாய்கள் விருத்தி செய்யப்பட்டுள்ள போதிலும் நீர் தேங்கி நிற்கும் பிரதேசங்கள் முறையான திட்டமிடல் அன்றி அத்துமீறி நிரப்பப்பட்டுள்ளமையால் அது நீங்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. கொழும்பு பெரும்பாக பிரதேசத்தின் நீர் வெளியேற்றப்படும் இடங்களும் கால்வாய்த் தொகுதியும் ஆண்டு முழுவதும் முறையாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை கூட்டுத்தாபனம் மேற்கொண்டு வருகின்றது. இது வெள்ளப்பெருக்கு குறைவடைய காரணமாக அமையும்.

(திட்ட வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு) இது கூட்டுத்தாபனத்தால் பராமரிக்கப்படுகின்ற பிரதான கால்வாய் அல்லது சிறிய கால்வாய் எனின் எமக்கு அறிவிக்கவும். அப்படி இல்லாத சந்தர்ப்பங்களில் உள்ளூராட்சி மன்றத்திடம் அறிவிக்கவும்.

உள்ளூராட்சி மன்றத்திடம் விண்ணப்பப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்கவும். அவர்கள் வாய்க்காலின் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காவும் பராமரிப்புக் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டிய ஆகக்குறைந்த தூரத்தின் அளவினை இக்கூட்டுத்தாபனத்திடமிருந்து விசாரித்தறிந்து நிர்மாணிப்புக்களைச் செய்யாமல் வெறுமையாக வைக்க வேண்டிய நிலத்தின் அளவு எவ்வளவு என்பதை உங்களுக்கு அறிவிப்பார்கள்.

வெப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கால்வாய் எனில் இக்கூட்டுத்தாபனத்திடமோ உள்ளூராட்சி மன்றத்திடமோ அறிவிக்கவும்.